Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண்புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும். பள்ளிகளில் இறைவணக்க நேரத்தின்போது வெண்புள்ளிகள் குறித்த உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். வரும் 11-ம் தேதி முதல் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.
பெரும்பாலும் வெண்புள்ளிகள் 13 வயதில இருந்து 40 வயதுக்குள்ளதான் தொடங்கும். பள்ளியில படிக்கும் மாணவனுக்கு வெண்புள்ளி வரும்போது டீன் ஏஜ்ல இருப்பான். அந்த வயசுல வெண்புள்ளிகள் பற்றின உண்மைகள் தெரியாததுனால, தடுமாற்றத்தால மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கு. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் அவங்களுக்கோ, சக மாணவர்களுக்கோ, உறவினர்களுக்கோ வெண்புள்ளி வந்தால் இயல்பாகவே இதைப் புரிஞ்சுக்க முடியும். மன உளைச்சலில் இருந்து வெளியில் வர முடியும்.
ஒரு மாணவன் 10 பேர்கிட்ட இந்தத் தகவலைக் கொண்டுபோய் சேர்க்கணும் என்பது எங்கள் நோக்கம். இதன் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் இந்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்க முடியும். வெண்புள்ளி இருக்கிறவங்களுக்கு என்னதான் கவுன்சலிங் கொடுத்து அனுப்பினாலும், மற்றவங்க விமர்சனங்கள் அவங்களைப் பாதிக்குது. இதனால் வெண்புள்ளி இருக்கிறவங்க இயல்பாகவே வெளியே போகத் தயங்கும் நிலை இருக்கு. இந்தச் சூழ்நிலையை மாற்றி வெண்புள்ளி இருக்கிறவங்களும் இயல்பாக வெளியில் செல்லும் நிலையை ஏற்படுத்தணும்.
உலகம் முழுக்க ரெண்டு சதவிகிதம்பேர் வெண்புள்ளி பாதிப்பில் இருக்கிறதாகவும். இந்தியாவில் இதன் எண்ணிக்கை நான்கு சதவிகிதம் இருப்பதாகவும் சொல்றாங்க. இந்த மக்களுடைய மன நலனைப் பாதுகாக்க இந்தப் பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
No comments:
Post a Comment