Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 4, 2023

இந்த விஷயங்களை தினமும் செய்தால் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்.. ஆய்வில் வெளியான தகவல்..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் இருந்து வருகின்றன.

முன்பெல்லாம் வயதனவர்களுக்கு மட்டுமே ஹார்ட் அட்டாக் போன்ற இதய நோய்கள் ஏற்பட்ட நிலையில் சமீப ஆண்டுகளாக இளைஞர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் இதய பாதிப்புகள் காணப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் இதய நோய்களுக்கு காரணமாக இருக்கும் ஃபேமிலி மெடிக்கல் ஹிஸ்ட்ரி, வயது உள்ளிட்ட ஆபத்து காரணிகளை மாற்ற முடியாது. ஆனால் இதய நோய்க்கான உங்கள் ஆபத்தை குறைக்க பல நடவடிக்கைகளை எடுக்கலாம். அந்த வகையில் பஸ் ஸ்டாப், அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து செல்வது, சில மணி நேரங்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளை செய்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் அகால மரணம் போன்ற பல அபாயங்களைக் குறைக்க உதவுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.


படிக்கட்டுகளில் அல்லது பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து செல்வது உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகள் நன்மைகள் அளிக்க கூடியது என்றாலும் எவ்வளவு நேரம் அவற்றை செய்வது உடலுக்கு நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது பற்றி நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் தொடர்ந்தது ஒர்கவுட்ஸ்களில் ஈடுப்பட முடியாத நபர்களுக்கு உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்று நம்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மொத்த ஆக்டிவிட்டி லெவல்களை பொருட்படுத்தாமல், நீண்ட கால செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் சார்லஸ் பெர்கின்ஸ் மையத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் இம்மானுவேல் ஸ்டாமடாகிஸ் பேசுகையில், சமீப ஆண்டுகளில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சிகள் மட்டுமல்ல, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது முதல் தரையை வேகமாக துடைப்பது வரை பல அன்றாட செயல்பாடுகளும் உதவுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் குறைந்த நேரமே மேற்கொள்ளப்படும் இதுபோன்ற அன்றாட செயல்பாடுகள் எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்பதை பற்றி நமக்கு மிகக்குறைவாகவே தெரியும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் எல்லா வகையான ஆக்டிவிட்டிஸ்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் சிறிய அளவில் செய்யப்படும் தினசரி வேலைகள் கூட நீங்கள் எவ்வளவு அதிகமாக ஆற்றலை செலவழித்து செய்கிறீர்களோ அவ்வளவு நன்மைகளை பெற வாய்ப்புள்ளது என்றார். மூத்த ஆய்வாசிரியர் மேத்தேயு அஹ்மதி இந்த ஆய்வு தொடர்பாக பேசுகையில், தினசரி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கு இது போன்ற உடல் உழைப்பு தேவைப்படும் செயல்களில் ஈடுபடுவது சிறந்த பலன் தர கூடியவையாக இருக்கின்றன. எனினும் இத்தகைய செயல்பாடுகளில் மக்கள் எவ்வளவு தீவிரமாக மற்றும் எவ்வளவு நேரம் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியமானது என்கிறார். 
1 நிமிடத்திற்கும் குறைவான சிறிய அளவுக்கு ஆக்டிவிட்டிகளை காட்டிலும் 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்களுக்கு செய்யப்படும் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடுவது 29% முதல் 44% வரை மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இது தொடர்பாக தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் சில நிமிடங்கள் உடல் செயல்பாடுகள் இருந்தாலும் அது தீவிரமான ஆக்டிவிட்டியாக இருந்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது குறைந்தப்பட்சம் நிமிடத்திற்கு 15% (அதாவது (நிமிடத்திற்கு 10 வினாடிகள்) தீவிரமாக செயல்படுபவர்கள் அதிக பலனை கண்டுள்ளனர். ஒருவேளை மாடிப்படிகள் ஏறுவது போன்ற 1 நிமிட செயல்பாடுகளில் ஈடுபடும் போது கூட மேலே குறிப்பிட்ட நிமிடத்திற்கு 15% என்கிற ரூலை பின்பற்றினால் குறிப்பிடத்தகுந்த நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஆய்விற்காக 42 - 78 வயதுடைய 25,241 பேர் அணிந்திருந்த ஸ்மார்ட்வாட்ச் போன்ற wrist device-ல் இருந்து கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்கான டேட்டாக்களை ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்விற்காக பயன்படுத்தினர். இதில் ஒர்கவுட்ஸ் அல்லது ஆக்டிவிட்டீஸ்களில் ஈடுப்படவில்லை என்று கூறியவர்களின் 7 நாள் உடல் செயல்பாடு முறைகளை பகுப்பாய்வு செய்ய ஆய்வாளர்கள் AI-ஐ பயன்படுத்தினர். ஆய்வின் போது பிசிக்கல் ஆக்டிவிட்டி பேட்டர்ன்களை ஆய்வாளர்கள் பங்கேற்பாளர்களின் ஹெல்த் ரெக்கார்ட்ஸ்களுடன் இணைத்தது, அவர்கள் எவ்வளவு நேரம், எவ்வளவு தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள், இது அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் என்ன என்பதை கண்டறிய 8 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்பாளர்கள் ஃபாலோ செய்யப்பட்டனர். 

டாக்டர் அஹ்மதி பேசுகையில், மிதமான தீவிரம் கொண்ட தினசரி ஆக்ட்டிவிட்டீஸ்களில் தொடர்ந்து ஈடுபடுவதும், அவற்றை 1 முதல் 3 நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்வதும் இதய நோய்களுக்கான அபாயத்தை குறைக்க உதவும் என தங்கள் ஆய்வு கூறுவதாக குறிப்பிட்டார். 1 முதல் 3 நிமிட தீவிர உடல் செயல்பாடுகள் கூட உண்மையில், 5 முதல் 10 நிமிடங்கள் செய்ய கூடிய செயல்பாடுகளுக்கு சமமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News