Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 2, 2023

அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம் !

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்
எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது.
#தேன்குளவி கொட்டியதற்கு.......
தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும்.
முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்...
பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்....
சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்...
பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்...
ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தேய்த்து வர அரிப்பு குறையும்.
அல்லது
முருங்கை இலை சாறு தேய்க்கவும் அல்லது வெற்றிலை சாறு தேய்க்க குணமாகும்
கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்து வர குணமாகும்.
#வண்டுகடித்து விட்டால்.....
பப்பாளி இலையை கசக்கி கடித்த இடத்தில் தேய்த்து தடிமனாக பற்று போல குணமாகும்..3 நாட்கள் செய்ய வேண்டும்...
அல்லது
துளசி சாறு எலுமிச்சை சாறு சம அளவு எடுத்து தடவ குணமாகும்.
#சிலந்திகடித்து விட்டால்.....
தானாக வந்து கடிக்காது.உடலில் ஏறினால் கடித்து விடும்.
ஆடாதோடை இலை 25 கிராம் எனில் பச்சை மஞ்சள்+ மிளகு இரண்டும் சேர்த்து 25 கிராம் அரைத்து கடித்த இடத்தில் தேய்க்க குணமாகும்...
தேள் கொட்டியதற்கு மற்றும் பொதுவான விஷ முறிவு
இரண்டு வெற்றிலை 6 மிளகு மென்று சாப்பிட உடன் விஷம் இறங்கும்.
உடல் அரிப்பு இருக்கும் கண் சிவந்து காணப்படும்.
குப்பைமேனி இலையை நன்றாக அரைத்து எலி கடித்த இடத்தில் தினமும் காலையும் மாலையும் பூசி வந்தால், எலி கடி விஷம் இறங்கும்.
#பெருச்சாளிகடி விஷம் குறைய
திப்பிலி, செஞ்சந்தனம் இவ்விரண்டையும் இடித்துப் பொடித்துச் சலித்து சூரணத்தை பத்திப்படுத்திக் கொண்டு அதில் கால் டீஸ்பூன் அளவாகத் தேனில் குழைத்து ஒருநாள் இருவேளை வீதம் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குறையும்.
பனை வெல்லம் 100 கிராம் சாப்பிட விஷம் முறியும்
கொழுஞ்சி வேர் ,சுக்கு சம அளவு எடுத்து 5 கிராம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.
அமுக்கிரா கிழங்கு சூரணம் செய்து 2 வேளை சிட்டிகை அளவு தேனில் கலந்து சாப்பிடவும்...அவுரி சமூலம் எடுத்து அரைத்து சாறு எடுத்து கடித்த இடத்தில் பற்று போட சில நாட்களில் குணமாகும்.
சுக்கு 10 கிராம், மிளகு 10 கிராம், வசம்பு 10 கிராம், முருங்கை ஈர்க்கு 10 கிராம் ஆகியவற்றை 500 மில்லி தண்ணீரில் போட்டு எட்டில் ஒன்றாய் கஷாயம் செய்து எடுத்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.
அல்லது
வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி பிறகு வெங்காய சாறை குடிக்க நாய்க்கடி விஷம் குறையும்.
கடித்த பாம்பை பொறுத்து மருந்தும் மருத்துவமும் மாறுபடும்.
பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும்,
இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள்.
பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள்.
இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது.
மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும்.
பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும்.
அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
பாம்பு கடித்த பிறகு இந்த முதலுதவி செய்த பின் பாரம்பரிய மருத்துவரை சந்தித்து விஷ முறிவு சிகிச்சை பெறுவது நல்லது.
மனிதர்கள் சில நேரம் தற்காப்பிற்காக சண்டை போடும் போது கடித்து விடுவதுண்டு.விஷம் ஏறும் வாய்ப்பும் உள்ளது.
அப்படி கடிப்பட்டால் கடிவாயில் கடுகடுப்பு எரிச்சல் தலைவலி மயக்கம் வந்தால் அவுரி வேர் 10 கிராம் நன்னாரி 10 கிராம் என சம அளவு எடுத்து அரைத்து கடிபட்ட இடத்தில் பூசி வர குணமாகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News