Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக, அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த போட்டி தேர்வை, தி.மு.க., அரசு ரத்து செய்ய வேண்டும் என, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்காக, இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.அப்போது, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் மற்றும் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சில், தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு, வெயிட்டேஜ் முறையில் மட்டும் பணி நியமனம் மேற் கொள்ளப்படும் என உறுதி அளித்ததாக, போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசு அறிவித்துள்ள ஆசிரியர் பணி நியமன அறிவிப்பில், போட்டி தேர்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆசிரியர் நியமனத்துக்கான போட்டி தேர்வு ரத்து செய்யப்படும் என, தி.மு.க., சார்பில் தேர்தல் வாக்குறுதி அளித்ததாகவும், அதை நிறைவேற்றவில்லை என்றும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment