Join THAMIZHKADAL WhatsApp Groups
உங்களில் பண்பு நலன்களை உடலில் சில அமைப்புகளை வைத்துக் கணிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் பெரும்பான்மையாக உங்களில் முகத்தின் அமைப்பைக் கொண்டு பண்புகள் கணிக்கப்படுகிறது.
அப்படி இருக்க, நெற்றியில் ஏற்படும் செங்குத்து கோடுகள் மூலம் உங்கள் பண்புகள், பலம், பலவீனம் போன்றவற்றைக் கணிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
நெற்றியில் பொதுவாக மூன்று வகையான கோடுகள் தோண்றும். கண்களுக்கும் நெற்றிக்கும் இடையில் செங்குத்தாக ஒரு கோடு, இரண்டு கோடு மற்றும் மூன்று கோடுகள் ஆகியவை பொதுவான நெற்றி கோடுகளாக உள்ளன. இதில் நீங்கள் எந்த வகை என்பதைப் பொறுத்து உங்களின் மனத்தின் குணங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.
நெற்றில் ஓரு செங்குத்து கோடு :
நீங்கள் ஒரு செங்குத்து நெற்றிக் கோடு வைத்திருந்தால், நீங்கள் அதிக உறுதித் தன்மை மற்றும் விடாமுயற்சி ஆகிய பண்புகளைக் கொண்டு இருப்பீர்கள். உங்களில் பணி மற்றும் இலக்குகளில் கவனம் செலுத்துவீர்கள். மேலும் அந்த பண்புகளுக்கான நீங்கள் அறியப்படுகிறீர்கள். நீங்கள் பொதுவாகப் புத்திசாலியாகவும் திறமையாகவும் பார்க்கப்படுகிறீர்கள். மேலும், உங்களைச் சிலர் சுயநலவாதியாகவும், காதல் இல்லாதவராகவும் கருதலாம்.
உங்களுக்கு நண்பர்களை விட அதிகம் எதிரிகளே இருப்பார்கள். உங்களின் திட்டத்தில் அதிக கவனத்துடன் செயல்படுவீர்கள். ஒரு செங்குத்து கோடு இருக்கும் பெண்கள் பொதுவாக அதிக கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த வகை நெற்றிக்கோடு கொண்டவர்கள் சட்டம், அரசியல், மருத்துவம், கல்வி, பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவர்.
நெற்றில் இரண்டு செங்குத்து கோடு :
உங்களின் நெற்றியில் இரண்டு செங்குத்து கோடு இடம்பெற்று இருந்தால், நீங்கள் மிகவும் அறிவாளியாகவும், சிந்தனையாளராகவும் இருப்பீர்கள். மேலும், எதையும் ஆராய்ந்து செயல்படுவீர்கள். கடின உழைப்பாளியாகவும், சிறந்த செயல்பாடும் கொண்டு வெற்றியடைவீர்கள். சில நேரங்களில் உங்களுக்கு மன அழுத்தம், கவலை ஆகியவையும் இருக்கும். நீங்கள் அதிக யோசனை செய்வாராக இருப்பீர்கள். இதனால் மிகவும் கடினமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உங்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.
நீங்கள் சிறந்த படைப்பாளி, புது புது திட்டங்கள் உங்களுக்குத் தோற்றும். அதனுடன் உற்சாக தன்மையுடன் இருப்பதினால் எப்போது உங்களை நீங்கள் மேம்படுத்திக்கொண்டே இருப்பீர்கள். அடுத்தவருக்கு உண்மையாக இருப்பீர்கள். அதன் மூலம் உங்களைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்பங்களை எப்போதும் ஆதரவளிப்பீர்கள். அடுத்தவரின் விருப்பங்கள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராகவும் இருப்பீர்கள். காதல் உறவைப் பொறுத்தவரை, சிறிது அகங்காரமாகவும் அல்லது கவனம் தேடும் நபராக இருப்பீர்கள்.
நடிப்பு, இசை, எழுத்து ஆகிய கலைத்துறைகள், வழக்கறிஞர், பொறியாளர், தொழிலதிபர், கணக்கு பார்ப்பவர் ஆகிய துறைகள் சிறந்ததாக இருக்கும்.
நெற்றில் மூன்று செங்குத்து கோடு :
உங்களின் நெற்றியில் மூன்று செங்குத்து கோடு இடம்பெற்று இருந்தால், நீங்கள் புத்திசாலியாகவும், அனுபவம் வாய்ந்த மற்றும் மேம்பட்ட பார்வை கொண்டவராகவும் இருப்பீர்கள். வாழ்க்கையைப் பொருத்தவரை உங்களுக்கு ஆழமாகப் புரிதல் இருக்கும். அதனைக்கொண்டு பலவிதமான கோணங்களில் சிந்திக்க முடியும். மிகவும் அறிவாளியாகவும், சிந்தனையாளராகவும் இருப்பீர்கள். முடிவு எடுப்பதில் நீங்கள் சிறந்தவராக இருக்கமாட்டீர்கள்.
அதனால், பலரின் ஆலோசனைகளைக் கேட்டு முடிவு செய்வீர்கள். இயற்கையாகவே நீங்கள் ஒரு போராளி. அதனால் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். மேலும், அடுத்தவருக்கு ஊக்கமளிக்கும் விதமாக நடந்துகொள்ளுவீர்கள். வேலையில் எப்போது அடுத்தவருக்கு உதவியாக இருப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல காரியங்களைச் செய்வீர்கள்.
ஆலோசனை, மக்கள் தொடர்புகள், மீடியா ஆலோசகர், சமூக ஆர்வலர், இசையமைப்பாளர், நடிகர், தத்துவஞானி அல்லது மதகுரு ஆகிய துறைகள் சிறந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment