Join THAMIZHKADAL WhatsApp Groups
வேலை அல்லது படிப்பு தேவைகளுக்காக கணினி வாங்க காத்திருப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இதில் உங்களுக்கான தகவல் அதிகம் பகிரப்பட்டுள்ளது.
அக்டோபர் 4ஆம் தேதி வரை பொறுத்திருந்து உங்களுக்குப் பிடித்த கணினியை அதிரடி சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என்றாலும், அமேசானில் தற்போது சில மடிக்கணினிகளுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. டெல், எச்பி, லெனோவோ, ஏசஸ் போன்ற பெரிய பிராண்ட் ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப்கள் விலை குறைந்து காணப்படுகின்றன. அவற்றின் பட்டியலை இதர அம்சங்களுடன் விரிவாகக் காணலாம்.
டெல் இன்ஸ்பிரான் 24 5400 ஆல்-இன்-ஒண் டெஸ்க்டாப் (Dell Inspiron 24 5400 All-in-One Desktop)
அமேசான் இந்தியா ஆன்லைன் வர்த்தக தளத்தில் இந்த ஆல்-இன்-ஒண் டெஸ்க்டாப் கணினிக்கு 18 சதவிகிதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.95,000 ஆகும். தற்போது ரூ.77,600 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கணினி 11 ஜென் இன்டெல் கோர் ஐ5-1135ஜி7 ப்ராசசர் உடன் வருகிறது. மேலும் 23.8" அங்குல முழுஅளவு கொண்ட எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றாட கணினி வேலைகளை பூர்த்தி செய்யும் விதமாக இந்த கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏசர் அஸ்பைர் சி24 23.8 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப் (Acer Aspire C24 23.8 inch Full HD IPS All-in-One Desktop)
அமேசான் இந்தியா தளத்தில் இந்த ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப் கணினிக்கு 40% சதவிகிதம் வரை இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ.63,990 ஆகும். தற்போது ரூ.44,992 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கணினி 11 ஜென் இன்டெல் ப்ராசசர் உடன் வருகிறது. இதில் விண்டோஸ் 11 ஹோம் இயங்குதளம் உள்ளது. அதனுடன் வேலைகளை சுலபமாக்கும் மைக்ரோசாஃப்ட் ஹோம் & ஸ்டூடென்ட் மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. மேலும் 23.8" அங்குல முழுஅளவு கொண்ட எச்டி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.
: தூய்மை பாரத திட்டம்: பழங்குடி மக்களின் வீடுகள், கழிப்பறைகளை சுத்தம் செய்த ஈஷா தன்னார்வலர்கள்
லெனோவோ ஐடியாசென்டர் ஏஐஓ 3 (Lenovo IdeaCentre AIO 3)
அமேசானில் இந்த ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப் கணினிக்கு 20% சதவிகிதம் வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரூ.64,290 என்ற விலையில் இருந்த இந்த கணினி, தற்போது ரூ.51,490 என பட்டியலிடப்பட்டுள்ளது. வீடியோ எடிட்டிங், கேமிங் போன்ற பெரிய வேலைகளை மேற்கொள்ள இந்த கணினி உதவியாக இருக்கிறது. 12 ஜென் இன்டெல் கோர் ஐ7 ப்ராசசர் கொண்டு இது கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையைப் பொறுத்து இந்த கணினியில் NVIDIA GeForce MX550 கிராஃபிக்ஸ் கார்டு பொருத்தி கணினியை வாங்கிக் கொள்ளலாம்.
ஏசஸ் ஹை பெர்ஃபார்மென்ஸ் 19" ஆல்-இன்-ஒண் டெஸ்க்டாப்
இந்த கணினியின் அசல் விலை ரூ.89,999 ஆகும். இதை தற்போது ரூ.26,999 என்ற விலையில் யூசர்கள் வாங்கலாம். 8 ஜென் இன்டெல் கோர் ஐ7 ப்ராசசர் , 16ஜிபி டிடிஆர்4 ரேம், 256ஜிபி SSD, விண்டோஸ் 11, மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் போன்ற அம்சங்கள் இதில் அடங்குகிறது.
எச்பி பெவிலியன் ஏஐஓ
எச்பி பெவிலியன் ஏஐஓ கணினியின் விலை ரூ.1,35,999-இல் இருந்து ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 408 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கணினியை இன்டெல் கோர் ஐ7 12700டி ப்ராசசர் இயக்குகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய தேதியில் குறிப்பிட்டுள்ள விலை தான் இங்கு தொகுப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். தினசரி விலை மாறுபடும் என்பதை கருத்திற்கொண்டு, வாங்கும் முன் அமேசான் தளத்தில் விலையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இந்த சலுகையை விலையுடன் கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. எனவே, ஆய்வறிந்து ஆன்லைன் தளத்தில் பொருள்களை வாங்கினால் லாபகரமாக இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
No comments:
Post a Comment