Join THAMIZHKADAL WhatsApp Groups
வீட்டு சமையலில் பயன்படுத்தப்படும சோம்பில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
சித்த மருத்துவத்தில் சோம்பை சிறந்த மூலிகையாக சொல்லப்படுகிறது.
தினமும் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவி செய்யும். சோம்பில் உடலை சுத்தப்படுத்தக்கூடிய மெட்டாபாலிசத்தை அதிகமாக உள்ளது. மேலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சோம்பில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் உள்ளன. இவை உடலில் சேரும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவி செய்யும்.
சரி தினமும் சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் -
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் கொதிக்க வைக்கப்பட்ட சோம்பு தண்ணீரை குடித்து வந்தால், நம் உடலில் தேவையில்லாமல் தங்கி உள்ள கொழுப்புகளை வெளியேறி உடல் எடை குறையும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு செரிமானம் ஆவதற்கு கொஞ்சம் கடினம் ஏற்படும். அப்போது, சோம்பு தண்ணீரை குடித்தால் விரைவில் செரிமானம் ஆகிவிடும்.
சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்தால் வயிற்றில் ஏற்படும் வீக்கங்கள், வயிறு உப்பசம் சரியாகும்.
சோம்பு தண்ணீர் தினமும் குடித்து வந்தால் அது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். சிறுநீரக கோளறை சரிசெய்யும்.
தினமும் காலையில் சோம்பு தண்ணீரை குடித்தால், அன்று நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடன் வேலை செய்யலாம்.
சோம்பு தண்ணீரை தினமும் குடித்து வந்தால, மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலி குணமாகும்.
இரவில் தூக்கச் செல்லும் முன் சோம்பு தண்ணீரை குடித்தால நிம்மதியான தூக்கத்தை பெறலாம்
No comments:
Post a Comment