தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் பல்வேறு கட்டங்களாக ஏற்கனவே போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.
அந்த வகையில் இன்று காலை 8.30 மணியளவில் டெட் தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசினர். அமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் மறு தகுதி தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தான் வரும் ஜனவரி சுமார் 2 ஆயிரம் பணியிடங்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பேசினர். அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து இன்று முதல் ஈரோட்டில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், தகுதி தேர்வு முடித்த ஆசிரியர்கள் ஈரோட்டில் போராட்டத்தை தொடர இருப்பதாக அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment