Monday, October 23, 2023

அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்.. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட த்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநில அரசு தன்னுடைய ஊழியர்களுக்கான புதிய உத்தரவாத ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில் இந்த உத்திரவாத ஓய்வூதிய திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அரசாணை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு பணியமர்த்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற முடியும். அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கில் கொல்லப்பட்டு மாதாந்திர உத்திரவாத ஓய்வூதியத்தை ஊழியர்கள் பெறுவார்கள் எனவும் இந்த திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் நபர் உயிரிழந்தால் அவரது மனைவிக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் உத்திரவாத ஓய்வூதியத்தில் 60% வாழ்க்கை துணைக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News