Join THAMIZHKADAL WhatsApp Groups
தேவையான பொருட்கள் :
தோல் நீக்கிய முழு உளுந்து 1 கப்,
கெட்டி தேங்காய்ப் பால் 1 கப்,
நெய் 1½டீஸ்பூன்,
ஏலக்காய் 5,
சர்க்கரை 1¼ கப்,
முந்திரிப் பருப்பு 15,
உலர் திராட்சை 20,
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்பையும் ஏலக்காய்களையும் குக்கரில்போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குழைய வேக வைக்கவும்.
ஆறிய பின் பருப்பு கடையும் மத்தினால் நன்கு மசியும் வரை கடையவும். பிறகு அதில் சர்க்கரையும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயில் சூடேற்றவும்.
சர்க்கரை முழுதும் கரைந்து கொதி வரும்போது தேங்காய்ப் பால் சேர்த்து கலந்து விடவும். முந்திரி, திராட்சைகளை நெய்யில் சிவக்க வறுத்து பாயாசத்தில் போட்டு இறக்கவும்.
சர்க்கரை அளவை அவரவர் டேஸ்டிற்கேற்ப கூட்டியோ, குறைத்தோ போட்டுக்கலாம்.
சர்க்கரைக்குப் பதில் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.
இதில் கிடைக்கும் சத்துக்கள், குறிப்பாகப் பெண்களுக்கு, ஏராளம்... ஏராளம்!!
No comments:
Post a Comment