Join THAMIZHKADAL WhatsApp Groups
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோவில்களில் நடைபெறும் ஊஞ்சல் சேவையில் தாசா சாகித்ய திட்டம் சார்பில், பக்திப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றது.
இந்த ஊஞ்சல் சேவையில் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட ஆர்வமுள்ள பாடகர்கள் மற்றும் பாடகிகள் தற்போது தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதற்காக தேவஸ்தானத்தின் தாசா சாகித்ய திட்டம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள பாடகர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலை தளமான https://apps.tirumala.org/dsp/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இதில் நேரடியாக அல்லது பிற ஊடகங்கள் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. கலைஞர்கள் தங்கள் விண்ணப்பங்களை இன்று முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பாடகர்களுக்கு நவம்பர்24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருப்பதியில் உள்ள மகதி ஆடிட்டோரியத்தில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பித்த பாடகர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இந்தச் செயல்முறை தொடர்பாக தேவஸ்தானம் எந்த முகவர்களையும், பிரதிநிதிகளையும் நியமிக்கவில்லை.எனவே மோசடி செய்பவர்களால் பாடகர்கள் ஏமாற வேண்டாம் என்றும் கூடுதல் விவரங்களுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment