ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டத்தை அமல்படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே கல்வி என்பதை வலியுறுத்தி பாஜகவைச் சார்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஊரின் கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வதால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான கல்வி வாரியம் மற்றும் பாடத்திட்டம் சாத்தியமில்லை.
உள்ளூர் வளங்கள், கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு தேசிய கட்டமைப்பு பாடத்திட்டத்துக்கு அவசியமாகிறது' என சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment