Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 17, 2023

PAN கார்டு தெரியும்.. அதென்ன PRAN கார்டு?.. இதோ படிச்சி தெரிஞ்சிக்கோங்க.!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியாவில் ஆதார் கார்டை போலவே வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.

மக்கள் பயன்படுத்தும் பான் கார்டு வருமானவரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. பான் கார்டின் பத்து இலக்க தனித்துவ எண்கள் ஒரு தனிப்பட்ட நபரின் அனைத்து விதமான பரிவர்த்தனைகளையும் பதிவு செய்து கொள்வதாக உள்ளது. பான் கார்டு வங்கி கணக்குடன் இணைப்பதற்கும் மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

வருமான வரி தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டு உதவியாக உள்ளது. அதேசமயம் பிரான் கார்டு என்பது 12 இலக்க தனித்துவமான எண்கள் கொண்ட ஒரு அட்டையாகும். இதனை நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட் லிமிடெட் நிறுவனம் வழங்கி வரும் நிலையில் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு இந்த பிரான் கார்டு கட்டாயமாக உள்ளது. அனைத்து விதமான முதலீடுகளையும் பரிவர்த்தனைகளையும் கண்காணிப்பதற்கும் ஓய்வூதிய பலன்களை வழங்கவும் பிரான் கார்டுகள் பயன்படுகின்றன. தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீடு செய்பவர்களுக்காக இந்த பிரான் அட்டைகள் வழங்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News