Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 28, 2023

PENSION கோரி ஒரு இலட்சம்பேர் தமிழ்நாடு CM-ன் இல்லத்தை முற்றுகையிட CPS ஒழிப்பு இயக்கம் அறைகூவல்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


திமுக-வின் தேர்தல் கால வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் இன்று (28.10.2023) திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் 4 கட்டப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

18.11.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்தோடு பட்டினிப் போராட்டம்.

27.12.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் மறியல்.

23 & 24.01.2024 :

2 நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்.

08.02.2024 :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இல்லத்தை முற்றுகையிடுவது.

நிறைவாக, CPS பாதிப்பிலுள்ளோர் போராட்டக் களம் நோக்கிப் படையெடுக்க வேண்டுமாறு TNGEA & TNRDOAவின் மேனாள் மாநிலத் தலைவரும், JACTTO-GEOவின் மேனாள் மாநில ஒருங்கிணைப்பாளரும், CPS ஒழிப்பு இயக்க மாநில ஆலோசகருமான தோழர் மு.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News