Wednesday, October 11, 2023

SBI கொண்டு வந்த சூப்பர் திட்டம்.. வங்கிகளுக்கு இனி அலைய தேவையில்லை.. வீட்டிற்கே வரும் சேவை..

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 'மொபைல் ஹேண்ட் ஹெல்டு டிவைஸ்' சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே வங்கி சேவைகளை SBI நிறுவனம் கொண்டு சேர்க்க உள்ளது.

இந்த மொபைல் "ஹேண்ட் ஹெல்டு டிவைஸ்" சேவையானது ஐந்து அடிப்படை வங்கி சேவைகளை வழங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கேஷ் வித்ட்ராயல், கேஷ் டெபாசிட், ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர், பேலன்ஸ் என்கொயரி மற்றும் மினி ஸ்டேட்மென்ட் போன்ற ஐந்து விதமான சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். SBI வங்கிகளில் நடைபெறும் மொத்த ட்ரான்ஸ்ஷாக்ஷன்களில் 75 சதவீதம் சேவைகள் மூலமாகவே பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் சோஷியல் செக்யூரிட்டி ஸ்கீம்கள், அக்கவுண்ட் திறத்தல், ரெமிட்டன்ஸ் மற்றும் கார்டு சார்ந்த சேவைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் SBI வங்கி தெரிவித்துள்ளது.

"வங்கி சேவைகளை எளிதாகவும், சௌகரியமாகவும் அணுகுவதற்கான ஒரு முயற்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் கஸ்டமர்களுக்கு 'மொபைல் ஹேண்ட் ஹெல்டு டிவைஸ்' சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதுவித சேவையை SBI சேர்மன் ஸ்ரீ தினேஷ் காரா அவர்கள் துவங்கி வைத்தார். அனைவருக்கும் அத்தியாவசியமான வங்கி சேவைகள் கிடைக்க பெறுவதில் இந்த புதிய முயற்சி பெரிய அளவில் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று SBI வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி சேவைகளை கஸ்டமர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்க்கும் இந்த மொபைல் ஹேண்ட் ஹெல்டு டிவைஸ் சேவை வங்கி துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். கஸ்டமர் சர்வீஸ் பாயிண்ட் ஏஜெண்டுகள் (CSP) மூலமாக கஸ்டமர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று, அவர்களுக்கான தேவைகளை இந்த சேவை மூலமாக SBI வங்கி வழங்குகிறது. வங்கி சேவைகளை அணுகுவதில் சிரமத்தை அனுபவிக்க கூடிய உடல்நல குறைவால் அவதிப்படுபவர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த முயற்சி நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.

Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொபைல் ஹேண்ட் ஹெல்டு டிவைஸ் அறிமுகத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து கொண்டே தடை இல்லாத ட்ரான்ஷாக்ஷன்கள் செய்வதற்கான அனுபவத்தை பெறுவார்கள். தொழில்நுட்பம் மூலமாக சாத்தியமாக்கப்பட்டுள்ள இந்த சேவை அனைவருக்கும் வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற SBI நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது," என்று SBI சேர்மன் தினேஷ் காரா கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News