Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்று மொபைல் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. காலையில் எழுந்து போனில் நேரத்தை செலவிடுபவர்கள் ஏராளம்.
இதனால் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் சாப்பிடும் போதும் தூங்கும் போதும் போனை விட்டு வைப்பதில்லை.
மக்கள் மொபைல் போன்களுக்கு அடிமையாகி இருப்பது ஒருபக்கம். ஆனால் இந்த பழக்கம் மிகவும் ஆபத்தானது. சிலர் மொபைலை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவர்கள். இவ்வாறு செய்வதால் உங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
தூங்கும் போது மொபைலில் இருந்து எவ்வளவு தூரம் இருக்க வேண்டும் என்பது பலருக்கு தெரிவதில்லை. மொபைல் போன்களை அருகில் வைத்துக்கொண்டு தூங்குபவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது குறித்து WHO எச்சரித்துள்ளது.
90 சதவீத பதின்ம வயதினரும், 68 சதவீத பெரியவர்களும் தங்கள் தலையணைக்கு அருகில் மொபைல் போனை வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தலையணைக்கு அடியில் தொலைபேசியை வைத்துக்கொண்டு தூங்குவது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மொபைல் போனில் இருந்து வரும் கதிர்வீச்சைத் தவிர்க்க தூங்கும் போது ஸ்மார்ட்போனை ஒதுக்கி வைப்பது நல்லது. முடிந்தால், தூங்கும் போது மொபைல் போன்களை குறைந்தது 3 அடி தூரத்தில் வைத்திருங்கள்.
தூங்கும் போது ஸ்மார்ட்போனை குறைந்தபட்சம் 3 அடி தூரத்தில் வைத்திருப்பது, மொபைல் வெளியிடும் ரேடியோ அலைவரிசை மின்காந்த ஆற்றலைக் குறைக்கிறது. இதனால் நீங்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட மாட்டீர்கள். மொபைலை தலையணைக்கு அடியில் வைத்து தூங்காதீர்கள்.
மொபைல் போன்களை அருகில் வைத்துக்கொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து WHO மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. WHO படி, மொபைல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சு தசை வலி மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கிறது. மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன்களின் சமநிலையையும் சீர்குலைக்கும். இது தூக்கத்தை கெடுக்கும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment