Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் பணியமைப்பு கல்வி பள்ளிகள் விடுதிகள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் விடுதிகள் அனைத்து மாவட்டங்கள் 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் , இறுதி பணி மூப்பு மற்றும் இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியல் அனுப்பக்கோருதல் தொடர்பாக ,
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் / விடுதிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / பட்டதாரி காப்பாளர்களுக்கு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க 01.03.2022 அன்றைய நிலையில் இடைநிலை ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை காப்பாளர்கள் நிலையில் ஒருங்கிணைந்த மற்றும் பாட வரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் இறுதி பணிமூப்பு பட்டியல் , இறுதி தேர்ந்தோர் பெயர் பட்டியல் விவரத்தினை அனுப்புமாறு , அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு பார்வை -1 இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது , இதுநாள் வரை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை இனியும் காலம் தாழ்த்தாமல் உடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
1. 01.03.2022 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த மற்றும் பாடவாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் இறுதி பணிமூப்பு பட்டியல் தயார் செய்து அனைத்து ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்
Panel Proceedings - Download here
No comments:
Post a Comment