இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.
இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது.
மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:-
* உடல் பருமன்
* முதுமை
* எலும்புகளில் அடிபடுதல்
தேவையான பொருட்கள்:-
* மஞ்சள்
* தண்ணீர்
செய்முறை:-
ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் 1 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி நன்கு குழப்பிக் கொள்ளவும். இந்த பேஸ்டை மூட்டுகளின் மேல் பயன்படுத்துவதற்கு முன் வெந்நீரில் காட்டன் துணியை நினைத்து பிழிந்து கொள்ளவும். பின்னர் இதை மூட்டுகளின் மேல் வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்கவும்.
பின்னர் தயார் செய்து வைத்துள்ள மஞ்சள் பேஸ்டை மூட்டுகளின் மேல் தடவிக் கொள்ளவும். இந்த ரெமிடியை இரவில் பயன்படுத்துவதன் மூலம் மூட்டு வலி மற்றும் வீக்கம் சில நாட்களில் சரியாகி விடும்.
No comments:
Post a Comment