தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10,11,12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதமாக தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை முன்கூட்டியே அறிவித்து வருகிறது. 10, 11, 12 ம் வகுப்பு களுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதியே நிறைவடைகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிவடைகிறது.
அதேசமயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மே 10ம் தேதி தேர்வு முடிவுகளும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மே 14ம் தேதி தேர்வு முடிவுகளும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மே 6ம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்புக்கு செய்முறை தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைகிறது. 11ம் வகுப்புக்கு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது. 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12 ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment