Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளநிலை உதவியாளர் / தட்டச்சர்(Junior cum Typist )பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதி அலுவலக நேரத்திற்குள் முன்பாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தொகுப்பூதியம்: இதற்கு, மாத சம்பளம் ரூ.12000/-(ரூபாய் பனிரெண்டாயிரம் மட்டும்) என்ற ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 2 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பத்தாம்வ குப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி பயன்பாட்டை அறிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
இன சுழற்சி: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC/DC) சார்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதர நிபந்தனைகள்: 32 வயதுக்குட்பட்டவராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
: தேனியில் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி..! விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ ..!
அனைத்து சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 10.11.2023 பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூகநலஅலுவலகம், சென்னை, மாவட்டஆட்சியர்அலுவலகம் 8-வதுதளம், சிங்காரவேலன்மாளிகை, இராஜாஜிசாலை, சென்னை-01 ஆகும்.
No comments:
Post a Comment