Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 12, 2023

அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநில, தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.

இந்த ஆள்சேர்க்கையின் மூலம் மொத்தம் 1,899 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள்:

அஞ்சல் உதவியாளர் (Postal Assistant) பதவியின் கீழ் 598 பணியிடங்களும் / அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (Sorting Assistant) பதவியின் கீழ் 142 பணியிடங்களும், தபால்காரர் (PostMan) பதவியின் கீழ் 585 பணியிடங்களும், மெயில்கார்டு (Mail gaurd) பதவியின் கீழ் 3 பணியிடங்களும் , பல்நோக்குப் பணியாளர் (Multi Tasking Staff) பதவியின் கீழ் 570 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் (Recruitment Notification) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்.

இதற்கான விண்ணப்பங்களை https://dopsportsrecruitment.cept.gov.in/ அதிகாரப் இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 09-12-2023 ஆகும்.

யார் விண்ணப்பிக்கலாம்: கூடைப்பந்து,கால்பந்து, கைப்பந்து, கபடி, மல்யுத்தம் என பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைப் பட்டியலில் உள்ள 63 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை தேசிய விளையாட்டு கூட்டமைப்பு செயலாளரிடம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டதற்கான சான்றிதழ், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அல்லது மாநில விளையாட்டு அமைப்பு செயலாளரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டதற்கான சான்றிதழ், கல்லூரி முதல்வர் , இயக்குநர் அல்லது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பொறுப்புஅதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை, மாநில கல்வித் துறை இயக்குனரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News