Join THAMIZHKADAL WhatsApp Groups
தபால் நிலையத்தில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்: தபால் உதவியாளர் 598, சார்டிங் அசிஸ்டென்ட் 143, போஸ்ட்மேன் 585, மெயில் கார்டு 3, எம்.டி.எஸ்., 570 என மொத்தம் 1899 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 351 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தபால் உதவியாளர், சார்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, போஸ்ட்மேன் பணிக்கு பிளஸ் 2, எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 9.12.2023 அடிப்படையில் எம்,டி.எஸ்., 18 - 25, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தகுதி: சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 9.12.2023
விபரங்களுக்கு: dopsportsrecruitment.cept.gov.in
No comments:
Post a Comment