Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்ட்ரல் வங்கியில் 192 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களை நவம்பர் 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த பணியின் விபரம்-
படித்த படிப்புக்கு தகுதி வாய்ந்த பல பணிகள் இருந்தாலும் அவற்றில் வங்கி பணிகள் முக்கியத்துவமும், தனித்துவமும் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பணி, அரசு விடுமுறைகளுடன்,வார இறுதி விடுமுறைகள், கை நிறைய சம்பளம், சமூக அங்கீகாரம் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பணியில் உள்ளன. அந்த வகையில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் தற்போது காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
Information Technology scale V: 1
Risk Manager scale V: 1
Risk Manager scale IV: 1
Information Technology scale III: 6
Financial Analyst scale III: 5
Information Technology scale II: 73
Law Officer scale II: 15
Credit Officer scale II: 50
Financial Analyst scale II: 4
CA -Finance & Accounts/ GST/Ind AS/ Balance Sheet /Taxation scale II: 3
Information Technology scale I: 15
Security Officer scale I: 15
Risk Manager scale I: 2
Librarian scale I: 1
ஆகிய மொத்தம் 192 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 19 ஆம் தேதி கடைசி நாளாகும். தகுதி வாய்ந்தவர்கள் https://centralbankofindia.co.in/en/recruitments என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டிசம்பர் கடைசி அல்லது 3 ஆம் வாரத்தில் ஆன்லைனில் எழுத்து தேர்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்படவுள்ளது.
No comments:
Post a Comment