Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
டப்பு கல்வியாண்டில் (2023-24) கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மாணவர் எண்ணிக்கையின்படி அரசுப் பள்ளிகளில் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணி நிரவல் கலந்தாய்வு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வழியாக நாளை ( நவ.20 ) நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக நாளை நடைபெறவிருந்த பணி நிரவலானது தள்ளிவைக்கப்படுகிறது. பணி நிரவல் கலந்தாய்வு, நவ.27-ம் தேதி நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment