Join THAMIZHKADAL WhatsApp Groups
உங்களிடம் டெபிட் கார்டு இருந்தால் போதும், குறைந்தபட்சமாக 50,000 ரூபாயில் தொடங்கி 2 கோடி வரை காப்பீடு மூலம் பெற முடியும.
இந்த காப்பீடு தொகையை எப்படி பெறுவது என்பது பற்றி பார்ப்போம்..
காப்பீடு (இன்சூரன்ஸ்) என்றாலே எல்ஐசி என்று தான் நம்மில் பலருக்கும் தெரியும். இதுதவிர ஆயுள் காப்பீட்டு திட்டம் அல்லது விபத்து காப்பீட்டு திட்டம் ஏதாவது தனியார் நிறுவனங்களில் நாம் போட்டிருப்போம். பொதுவாக இதுபோன்ற திட்டத்தில் பணம் செலுத்தி வந்தால், விபத்தில் மரணம் அல்லது கொடுங்காயம் நிகழும் போது நம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பண பலன்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரும். இதுதான் எதார்த்தமான நடைமுறை..
இதுதவிர நம் கையில் ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே நமக்கு காப்பீடு கிடைக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. உண்மை தான். இன்றைக்கு சாமானியர்கள், ஏழைகள் என எல்லோரிடம் இருக்கும் கார்டு என்றால் டெபிட் கார்டு தான். இந்தியாவில் ஆதார் கார்டை விட அதிகமாக உள்ள கார்டு என்றால் டெபிட் கார்டு தான். பணப்பரிவர்த்தனைக்கு மட்டுமே டெபிட் கார்டினை நாம் பயன்படுத்துகிறோம். கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு அச்சாணியே நம்முடைய டெபிட் கார்டு தான்.
இந்த டெபிட் கார்டு மூலம் சுமார் 2 கோடி வரை காப்பீடு பெற முடியும். "டெபிட் கார்டு காம்ப்ளிமென்ட்ரி இன்சூரன்ஸ் திட்டம்" (Complimentary Insurance Cover) மூலம் விபத்து காப்பீடு டெபிட் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வங்கிகளால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மற்ற காப்பீடுகளை போல, மாதந்தோறும் அல்லது ஒவ்வொரு வருடமும் பணம் கட்டத் தேவையில்லை.
அதற்கு பதில் நாம் பயன்படுத்தும் டெபிட் கார்டுகளுக்காக வருடந்தோறும் ஒரு தொகை நம்முடைய வங்கி கணக்கில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்து கொள்ளும். இந்த தொகையை உங்கள் சார்பில், வங்கிகளே காப்பீட்டு நிறுவனங்களில் நிர்வகித்து வரும் காப்பீடு கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடும். இந்த இன்சூரன்ஸ் பணத்தையே விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் போது தரப்படுகிறது.
டெபிட் கார்டு காப்பீடு: இந்தியாவின் எல்லா வங்கிகளுமே, பொது மற்றும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களோடு இணைந்து இந்த டெபிட் கார்டு காம்ப்ளிமெண்ட்ரி இன்சூரன்ஸ் கவரேஜ் என்று திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. எனவே டெபிட் கார்டு வாங்கும் போதே இந்த திட்டம் பற்றி தெளிவாக கேட்டு அதற்கான விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த திட்டம் சுமார் 20 வருடத்திற்கு மேல் அமலில் இருக்கிறதாம். வங்கிகளின் இணையதளங்களில் போய் பார்த்தால் இதுபற்றி தெளிவாக அறிய முடியும். எனவே டெபிட் கார்டு வாங்கும் போதே டெபிட் கார்டு காம்ப்ளிமென்ட்ரி இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்துவிடுங்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: விபத்து நடந்த 3 மாதங்களுக்குள் விபத்தை சந்தித்தவர்கள் அல்லது விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் இன்சூரன்ஸ் தொகைக்கு வங்கிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். . வங்கிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் சரியாக அளித்தால், விபத்தின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சமாக 50,000 ரூபாயில் தொடங்கி 2 கோடி வரை காப்பீடு பணம் கிடைக்கும். அதற்கு ஜஸ்ட் வங்கிக்குச் சென்று டெபிட் கார்டு இன்சூரன்ஸ்க்கு என்று உள்ள விண்ணப்பங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முறையாகப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு சேர்த்து சமர்ப்பித்தால் போதும். வேறு எதுவும் தேவையில்லை. உங்களுக்கு பணம் கிடைத்துவிடும்.
நிராகரிப்பு ஏன்: இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால், வருடாந்திர கட்டணம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து சில்வர், கோல்டு, டைமண்ட் என்ற படிநிலையில் உள்ள டெபிட் கார்டுகளுக்கு காப்பீடு தொகை கிடைக்கும். அதாவது அதிகமான கட்டணம் செலுத்தும் டெபிட் கார்டு பயன்படுத்துவோருக்கு அதிகமான இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம் விபத்தை சந்தித்த நபர், 3 மாதங்களுக்குள் அல்லது அவர் சார்ந்தவர்கள் அந்த வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்க தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment