தேசிய அளவில் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய ஒவ்வொரு ஆண்டும் அடைவுத் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மேற்கண்ட அடைவுத் தேர்வை நடத்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, . தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 3, 6 மற்றும் 9ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கும் மேற்கண்ட தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதால், இந்த தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது.
இந்நிலையில், மேற்கண்ட தேர்வு எழுத உள்ள பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு குறைவான வருகைப் பதிவு உள்ள பள்ளிகளில் தேர்வு நடக்காது.
No comments:
Post a Comment