உங்கள் பான் கார்டு சேதமானால் அல்லது தொலைந்துவிட்டால் சில எளிய நடைமுறைகளைப் பின்பற்றி பான் கார்டை வீட்டிலேயே டெலிவரி பெற்று கொள்ளலாம்.
இதற்கு ஐம்பது ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான அப்பிளிக்கேஷன் ப்ராசஸும் எளிமையானது தான்.
இப்படி தொலையும் போது புதிய பான் கார்டு அச்சிட பல நேரங்களில் நாம் உள்ளூர் கடைக்கு செல்லும்போது, அதற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வசூலிக்கிறார்கள்.
ஆனால் ஆன்லைனில் மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பித்தால் குறைந்த செலவில் வீட்டில் இருந்தபடியே புதிய ஒரிஜினல் பான் கார்டைப் பெறலாம்.
பான் கார்டை மீண்டும் அச்சிடுவதற்கான எளிதான செயல்முறை:
முதலில் நீங்கள் NSDL (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்)
https://nsdl.co.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
அதில் இப்போது Reprint Pan Card என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். உள்ளே நீங்கள் உங்கள் பான் கார்டு எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
அதன் பின்னர் நீங்கள் விதிமுறை மற்றும் நிபந்தனைகளைக் காண்பீர்கள்.
அவற்றை ஏற்றுக்கொண்டால், நீங்கள் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது உங்கள் முன் ஒரு புதிய பக்கம் திறக்கும்.
இதில் பான் கார்டு தொடர்பான அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் செய்துகொள்ளலாம்.
அதன் பின்னர் உங்கள் அப்ளிகேஷனை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு OTP கோரிக்கை வரும். அதை கிளிக் செய்யவும்.
நீங்கள் கிளிக் செய்தவுடன், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
OTP ஐ உள்ளிட்டு Validate என்பதைக் கிளிக் செய்யவும்.
அதன் பின்னர் கட்டணத்திற்கான பக்கம் திறக்கும்.
அதில் உங்கள் விருப்பமான கட்டண வழிமுறையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் ஐம்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
கார்ட், UPI அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்தலாம்.
பணம் செலுத்திய பின்னரே விண்ணப்பம் வெற்றிபெற்றதாக செய்தி மற்றும் மெயில் வரும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரிஜினல் பான் கார்ட் உங்கள் வீடுவந்து சேரும்.
No comments:
Post a Comment