தேவையான பொருட்கள்
தேன் - 50 மில்லி லிட்டர்
மிளகு - 10 கிராம்
செய்முறை
ஒரு ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் தேனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் மிளகை போட்டு 3 வாரங்கள் மூடி வைத்துவிடவேண்டும்.
இதை 3 வாரங்கள் கழித்து திறந்தால், மிளகு நன்றாக ஊறி, மிளகின் சுவையும், தேனின் சுவையும் கலந்து தயாராகியிருக்கும்.
இதை தினமும் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காலையில் அரை ஸ்பூன் தேனுடன் இரண்டு மிளகை நன்றாக கடித்து சாப்பிடலாம். பின்னர் மாலையில் அரை ஸ்பூன் நெய்யை மிளகுடன் கடித்து சாப்பிடலாம் அல்லது இரவில் உறங்கச்செல்லும் முன்னர் கூட சாப்பிடலாம்.
இதனால் உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும், உடலில் சம நிலையில் பராமரிக்க உதவும்.
இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடனும், ஆரோக்கியமாக வாழலாம்.
இது இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால் மிகவும் நல்லது. பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.
வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் குணமாகும். இதை எடுத்துக்கொள்ளும்போது உடலில் உள்ள ராஜ உறுப்புகள் சீராகும்.
வயிற்று வலி, மூட்டு வலிக்கு கூட மருந்தாகும். ரத்தநாளங்களில் உள்ள அடைப்பை நீக்கும்.
என்றும் இளமையுடன் வாழ உதவும் காயகற்பம் இது. வீட்டில் உள்ள இரண்டே இரண்டு பொருட்களை பயன்படுத்தி செய்தால் போதுமானது. செய்வது எளிதானது.
No comments:
Post a Comment