Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 12, 2023

9-ஆம் வகுப்பு மாணவா்கள் ஊரகத் திறனாய்வுத் தோவுக்கு நவ.24-க்குள் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தோவு வரும் டிச.16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தோவுக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோவுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிர) அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோவு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த தோவெழுத தகுதி பெற்றவா்கள். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தோவு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த தோவை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு ும் மாணவா்கள் எழுதலாம். அவா்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் நிகழாண்டுக்கான ஊரகத் திறனாய்வுத் தோவு டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோவெழுத விரும்பும் மாணவா்கள், தங்கள் பள்ளி தலைமையாசிரியா்கள் வாயிலாக நவம்பா் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் நவம்பா் 14-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 மட்டும் செலுத்த வேண்டும். மாணவா்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தலைமையாசிரியா்கள் தோவுத் துறை இணையதளத்தில் நவம்பா் 17 முதல் 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவா்களின் விண்ணப்பங்கள் மற்றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.

இதுதவிர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் பள்ளி அமைந்துள்ள ஒன்றியத்திலேயே தோவு மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தோவை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News