''போட்டி (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளை ஆண்டுதோறும் தடையின்றி நடத்த வேண்டும்'' என தமிழக அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தற்போது பணியாளர் நியமனம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 5,000 பணியிடங்களுக்கான குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிந்தும், அதற்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை. கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய நிலையில், 15,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்வு குறித்து ஓர் ஆண்டுத் திட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, குரூப்-4 பதவிகளுக்கான அறிவிக்கை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதற்கான அறிவிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதேபோல், குரூப்-1தேர்விற்கான அறிவிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை வெளியிடப்படவில்லை. குரூப்-4 பதவிகளுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, தேர்வினை நடத்தி, முடிவுகளை வெளியிடவும், இதேபோன்று குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்விற்கான அறிவிக்கைகளை வெளியிட்டு, அவற்றிற்கான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடவும், இதன்மூலம் வேலையில்லாத் திண்டாட்டத்தினை போக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment