Join THAMIZHKADAL WhatsApp Groups
சிவில் தேர்வில் குளறுபடி.. எங்க பக்கம் எந்த தவறும் இல்லை : டிஎன்பிஎஸ்சி விளக்கம்!!!
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ள விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
வடசென்னையில் உள்ள தேர்வு மையத்தில் மதியம் நடைபெறவிருக்கின்ற தேர்வுக்கான கேள்வித்தாள் ஆனது காலையிலேயே விநியோகிக்கப்பட்டதால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கூறுகையில், இந்த தேர்வை நடத்துவது சென்னை உயர் நீதிமன்றம். அவர்கள் தயார் செய்த கேள்வித்தாள்களை தான் எங்களிடம் கொடுத்தார்கள்.
நாங்கள் அதை தேர்வர்களுக்கு வினியோகம் செய்தோம். இதில் எங்களுடைய தவறு எதுவும் இல்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment