வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் தொடங்கியது. இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள ஏதுவாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு வெளியாகி ஒருவாரத்துக்குள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் ஆன்லைன் மூலம் அதிக எண்ணிக்கையிலான படிவங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மொத்தம் 36 ஆயிரத்து 142 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக கோவையில் 2 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும், முதன்முறை வாக்காளர்களை சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment