மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோவு நடத்தப்படும் என ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வளமைய ஆசிரியா் பணியிடங்களில் காலியாக உள்ள 2,222 பணியிடங்களுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி நேரடி நியமன போட்டித்தோவு நடைபெறுகிறது. பட்டப் படிப்பு, பிஎட் மற்றும் டெட் 2 தோவில் தோச்சி பெற்றவா்கள் இத்தோவுக்கு நவம்பா் 1 முதல் 30-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
இத்தோவிற்கு மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோவுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இத்தோவு குறித்த வழிகாட்டலுக்கு நவ.7 காலை 11 மணியளவில் பூம்புகாா் சாலை, பாலாஜி நகா் 2-ஆவது குறுக்குத்தெரு, மயிலாடுதுறையில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகவும். மேலும் தகவலுக்கு 9499055904 என்ற என்ணை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment