நாம் செய்யும் உணவானது மிகவும் வாசனையாக இருக்கவும் மேலும் ஒரு வித சுவையை கூட்டவும் ஏலக்காயை பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
குறிப்பாக இனிப்பு வகைகள் எடுத்துக் கொண்டால் அதில் ஏலக்காய் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அப்படி பயன்படுத்தும் ஏலக்காயில் நம் அறியாத பல நன்மைகளும் உள்ளது. நாம் உபயோகிக்கும் ஏலக்காயில் இரும்பு சத்து முதல் பொட்டாசியம் வரை அனைத்து வித ஊட்டச்சத்துக்களும் உள்ளது.
அதுமட்டுமின்றி விட்டமின் ஏ விட்டமின் சி போன்றவையும் உள்ளது. இதனை தினம் தோறும் ஒன்று எடுத்துக் கொண்டாலே நமது உடலில் பல மாற்றங்களை காணலாம். அந்த வகையில் செரிமான கோளாறு பிரச்சனை இருப்பவர்கள் ஒரு ஏலக்காயை சாப்பிட்டாலே போதும், உடலில் செரிமான நீரை சுரக்க செய்து நன்றாக ஜீரணம் அடைய செய்யும்.
அதேபோல பசி எடுக்காதவர்களும் இந்த ஏலக்காயும் நன்றாக மென்று சாப்பிடலாம், மேற்கொண்டு பசியை தூண்ட செய்யும். வயிற்றுப்போக்கு வயிற்று வலி என வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும். மார்பில் சளி அதிக அளவு இருந்தால் மூச்சு விடுவதற்கே மிகவும் சிரமப்படுவர்.அவ்வாறு இருப்பவர்கள் ஏலக்காயை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஏலக்காயில் சளியை கட்டுப்படுத்தும் சத்துக்கள் உள்ளதால் இது ஆன்டி பாக்டீரியாவாகவும் நமது உடலில் வேலை செய்கிறது. பலருக்கும் வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கும் அவ்வாறு இருப்பவர்களும் ஏலக்காயை சாப்பிடலாம். அதே போல உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து இதயம் ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கும். குறிப்பாக இந்த பச்சை ஏலக்காய்களை பயன்படுத்துவதை விட கருப்பு ஏலக்காய்களை பயன்படுத்தினால் இதயத்தின் ரத்த ஓட்டத்திற்கு மிகவும் நல்லது.
அதேபோல பல் சொத்தை, பல் வீக்கம் பல் வலி போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த ஏலக்காய் நல்ல தீர்வை அளிக்கும். ஏலக்காயை மென்று சாப்பிடும் பொழுது அதிலிருந்து உமிழ் நீர் வெளியாகும். இதன் மூலம் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நிவர்த்தி அடையும். அதேபோல வெளியூர்களுக்கு செல்பவர்கள் பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்படும் பிரச்சனை கட்டாயம் இருக்கும்.
அவ்வாறு இருப்பவர்கள் தங்களுடன் ஒரு ஏலக்காயை எடுத்துச் சென்றால் போதும் வாந்தி மயக்கம் ஏதும் ஏற்படாது. புற்றுநோய் வருவதை தடுக்கும் ஆற்றல் இந்த ஏலக்காய்க்கு உள்ளது. அதேபோல ஏலக்காயை நன்றாக தூள் செய்து சுடு தண்ணீரில் போட்டு குடித்தால் தொடர் விக்கல் நின்றுவிடும்.அதே போல ஏலக்காயை அதீத அளவில் எடுத்துக் கொண்டாலும் நமது உடலுக்கு தீமை தான்.குறிப்பாக பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணி பெண்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
No comments:
Post a Comment