Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியில் துறையில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள் விவரங்கள்:
பதவியின் பெயர் | காலிப் பணியிட எண்ணிக்கை | ஊதிய விகிதம் |
நிரந்தர முழுக் காவலர் | 1 | ரூ. 15,700 - 58,100 (Level - 1) |
தூய்மைப் பணியாளர் | 2 | ரூ. 15,700 - 58,100 (Level - 1) |
அலுவலக உதவியாளர் | 6 | ரூ. 15,700 - 58,100 (Level - 1) |
வயது வரம்பு (01.07.2023 அன்றைய தேதியில் ) :
குறைந்தபட்ச வயது-18;
அதிகபட்ச வயது: பட்டியல் பழங்குடியின்ர -37;
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர் - 32;
பொது பிரிவினர் -32
கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; (தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை :
1) des.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அண்மையில் எடுக்கப்பட்ட Passport Size Colour புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும்.
2) ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் போது, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடவும் வேண்டும்.
3) ஆதார் கார்டு, இருப்பிட முகவரி, வயது, கல்வித் தகுதி மற்றும் சாதிச் சான்று குறித்த சான்றுகளின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வின் போது மேற்கண்ட சான்றுகளின் அசல் ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்கவும் வேண்டும்.
: 3000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்: எய்ம்ஸ் நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு
4) விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
5) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி : இயக்குநர், பொருள் இயல் மற்றும் புள்ளிஇயல் துறை, டி.எம்.எஸ்.வளாகம் தேனாம்பேட்டை , சென்னை - 600006,
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 5.12.2023 மாலை 5.45 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், முழுமையான விவரங்களுடன் பெறப்படாத விண்ணப்பங்கள், உரிய சான்றிதழ்கள் இல்லாமல் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நாள் குறித்த விவரம் தபால் மூலமாக பின்னர் தெரிவிக்கப்படும்.
No comments:
Post a Comment