Join THAMIZHKADAL WhatsApp Groups
சுடு தண்ணீரை நம்மில் பலரும் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மட்டுமே அருந்துவோம். ஆனால் அவ்வாறு அருந்தும் சுடுதண்ணீரில் பல நன்மைகள் உள்ளது.இதனை தினம்தோறும் எடுத்துக் கொண்டால் நாளடைவில் வரும் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.குறிப்பாக தினம்தோறும் குடிக்கும் சுடு தண்ணீரில் சிறிதளவு சுக்கு அல்லது இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து குடித்து வர சளி என்பதே நமது உடலில் தங்காது.
அதுமட்டுமின்றி உடல் வலி போன்றவற்றையில் இருந்தும் நம்மை பாதுகாக்கும். இந்த நவீன காலகட்டத்தில் பலரும் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வேலை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு இந்த சுடு தண்ணீரானது செரிமானத்தை சீராக்க உதவும். குறிப்பாக சளி உண்டாக முதலில் சைனஸ் பிரச்சனை தான் காரணமாக இருக்கும். சைனஸ் ஆனது நமது மூக்கு துவாரங்கள் என தொடங்கி அனைத்திலும் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
இதனை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து மூக்கின் மேல் மற்றும் காதுகளின் பின் தடவி விட சைனஸ் பிரச்சனையால் உண்டாகும் தலைவலி மூக்கடைப்பு என அனைத்தும் குணமாகும்.அதேபோல சைனஸ் பிரச்சனையில் ஒரு சிலருக்கு காது அடைப்பு காது வலி உண்டாகிவிடும். அவ்வாறு இருப்பவர்கள் சிறிதளவு பூண்டை ஒரு காட்டன் துணியால் சுருட்டி இரு காதுகளிலும் வைத்துக் கொள்ள அடைப்பு 10 நிமிடத்திலேயே நீங்கிவிடும்.
மேற்கொண்டு சைனஸ் பிரச்சனையின் மூக்கடைப்பு தலைவலி போன்றவைகளுக்கு, வீட்டின் அருகில் இருக்கும் சிறிதளவு மனலை எடுத்து சூடுபடுத்த வேண்டும்.பின்பு ஒரு காட்டன் துணி கொண்டு அதனை சூடு படுத்தி மூக்கின் மேல் பகுதி என தொடங்கி காதுகளின் பின் பக்கம் வரை ஒத்தடம் கொடுக்க நல்ல மாற்றத்தை காண முடியும்.
ஆனால் சைனஸ் ஆரம்பகட்ட காலத்திலேயே தடுக்க வேண்டும் என்றால் தினந்தோறும் சுடு தண்ணீர் அருந்த வேண்டும். குறிப்பாக அதில் சிறிதளவு இஞ்சி அல்லது சுக்கும் மேற்கொண்டு சிறிதளவு துளசியும் சேர்த்து கூட குடிக்கலாம் இவ்வாறு செய்து வர உடலில் சளி ஏதும் தேங்காமல் உடல் ஆரிலோக்கியமாக இருப்பதை காண முடியும்.
No comments:
Post a Comment