Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 2, 2023

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை தேர்வு.! எப்படி பதிவு செய்வது.?

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நடைபெறவுள்ள ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 10.08.2023 முதல் 21.08.2023 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்சமயம் தேர்வர்களின் நலன் கருதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 06.11.2023 ( திங்கள் கிழமை) முதல் 10.11.2023 (வெள்ளிக்கிழமை) வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனவே தேர்வர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 06:112023 முதல் 10.11.2023 வரை பதிவிறக்கம் செய்து. விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து 10.11.2023 ற்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை நேரில் அணுகி, பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டுமே.

ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள இத்தேர்வர்கள் (முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள / ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகைப்புரியாத தேர்வர்கள் இத்துறையால் பொதுத்தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் சேவை மையத்திற்கு (NODAL CENTRE) சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டு சமர்ப்பித்து பொதுத்தேர்விற்கு பதிவு செய்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் வழங்கப்படும் ஏப்ரல் 2024-ற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை கொண்டே தேர்வர்கள் செய்முறைத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News