ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள்தண்ணீர் மற்றும் காற்றின் மூலம் இயங்கும் ராக்கெட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
தினமலர் பட்டம் நாளிதழ் படித்து வரும் இவர்கள் சாதனை செய்துள்ளனர்.ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள்அகமது சாலிம் 13, முகமது தன்ஸித் 13, ஆகிய இருவரும் தண்ணீர் மற்றும் காற்றின் அழுத்தத்தால் இயங்கக்கூடிய பாட்டில் ராக்கெட் கண்டுபிடித்தனர்.அதன் செயல்முறை விளக்கத்தை நேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
மாணவர்கள் அகமது சாலிம், முகமது தன்ஸித் ஆகியோர் கூறியதாவது:ஒரு லி., கொள்ளளவுகொண்ட காலி ஜார்பெட் பாட்டிலில் பாதி அளவு தண்ணீரை நிரப்பி அவற்றின் மூடியாக வால்டியூப் வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை குறிப்பிட்ட அழுத்தத்தில் தாங்கும் அளவிற்கு காற்றால் நிரப்ப வேண்டும்.
பின்னர் பிரத்தியேக ஸ்டாண்டில் வைத்து வால் டியூப்பை மெதுவாக திறந்து விட்டால் 30 அடி உயரத்திற்கு சீறிப் பாய்ந்து பின் கீழே விழுகிறது. இதே போன்று 70 மீ., நீளத்திற்கு நீண்ட கட்டு கம்பியால் கட்டி வைத்து தரையில் கீழிருந்து மேல் நோக்கிய கம்பியின் வழியாக இணைக்கப்பட்ட சிறிய பைப் துவாரத்தின் வழியாக சீறிப்பாய்கிறது.காற்று மற்றும் தண்ணீரின் அழுத்தத்தால் இயங்கக்கூடிய இந்த ராக்கெட் மூலம் அறிவியலின் தத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கி காட்ட முடிகிறது.
அறிவியல் உள்ளிட்ட பொது அறிவு, தகவல் சார்ந்த விஷயங்களுக்கு தினமலர் நாளிதழின் பட்டம் மாணவர் பதிப்பு பயனுள்ளதாக உள்ளது, என்றனர்.சோதனை விளக்கம் அளித்த மாணவர்களை தலைமை ஆசிரியர் தமிழரசி, அறிவியல் ஆசிரியர் பானுமதி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment