Join THAMIZHKADAL WhatsApp Groups
வைகுண்ட ஏகாதசி பெருநாளையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
அன்று தொடங்கி ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
எனவே சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை தரிசித்து சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய விரும்பும் பக்தர்கள் வசதிக்காக நவம்பர் 10ஆம் தேதி, 300 ரூபாய் தரிசன டிக்கெட் மற்றும் ஸ்ரீவானி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட் ஆகியவற்றை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு, டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரையான பத்து நாட்களுக்கும் மொத்தமாக 2 லட்சத்து 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.
திருப்பதி
அதேபோல் நவம்பர் 10ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளாக தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.
நவம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணி முதல் திருப்பதி, திருமலையில் உள்ள தேவஸ்தான தங்கும் அறைகளையும் பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment