Join THAMIZHKADAL WhatsApp Groups
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16-ல் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 16-ல் மத்தியமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு மறுநாள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனையொட்டி மத்திய கிழக்கு , தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment