Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 3, 2023

சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது

சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளை சரிசெய்துவிடும்.

ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. சரும எரிச்சலை உண்டாக்கிவிடும். அதனுடன் சில பொருட்களை கலந்து உபயோகிக்கும் போது கற்றாழையின் முழுப்பலன் கிடைப்பதோடு அழகை அதிகரிக்கச் செய்து விடும்.

கற்றாழையுடன் எந்த பொருளை சேர்த்தால் என்ன பயன் தரும் என்று பார்க்கலாம்

மஞ்சள்

இந்த குறிப்பு அதிக எண்ணெய் மற்றும் முகப்பருக்கள் இருப்பவர்கள் உபயோகிக்கலாம்.

கற்றாழையுடன் சிறிது மஞ்சள் குழைத்து முகத்திற்கு போட்டு 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

இப்படி செய்தால் எண்ணெய் வழியாது. முகப்பருக்களின் தீவிரம் குறைந்து சருமம் பொலிவடையும்.

வெள்ளரிக்காய்

கற்றாழையுடன் சிறிது வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். வாரம் 3 முறை செய்தால் நுண்ணிய சுருக்கங்களும் காணாமல் போய்விடும்.

தக்காளி

முகம் கருமை படர்ந்து இருந்தால் அல்லது அதிக எண்ணெய் இருந்தாலும் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தக்களியின் சதைப் பகுதியை மசித்து அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் போடவும். இது நிறத்தை பொலிவடையச் செய்யும்.

அரிசி மாவு

முகம் மரும் கழுத்துப் பகுதியில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை அகற்ற இந்த குறிப்பு மிகவும் சிறந்தது. அரிசி மாவு 1 ஸ்பூன் எடுத்து அதில் கற்றாழையை கலந்து முகம் கழுத்தில் மென்மையாக தேய்க்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். நல்ல பலன் கிடைத்துவிடும்.

பால்

வறண்ட சருமம் இருப்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். பாலில் சிறிது கற்றாழை கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடத்திற்கு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். முகம் மென்மையாகும். மினுமினுப்பை தரும். ஈரப்பதம் அளிக்குமாம்.

வாழைப் பழம்

சருமம் சுருங்கி வயதான தோற்றமாக இருப்பவர்கள் இந்த குறிப்பை செய்து பார்க்கலாம். வாழைப்பழத்தை மசித்து அதனுடன் கற்றாழையின் சதைப் பகுதியை கலந்து முகத்தில் போடவும் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் சருமம் இறுகிவிடும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News