Join THAMIZHKADAL WhatsApp Groups
உலகில் பலருக்கும் இருக்க கூடிய பிரச்னை உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவு. ஸ்டைலான உணவை சாப்பிடுகிறோமே தவிர, ஆரோக்கியமான உணவை உட்கொள்கிறோமா என்பது கேள்விக்குறியே?
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ரத்த உற்பத்தி அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
* பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.
* நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும்.
* தினசரி இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
* பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
*முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து, சுற்றியுள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
*தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
*இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் பசியை தூண்டும் தன்மை கொண்டது.
*உலர் பேரிச்சை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் ரத்தம் அதிகரிக்கும், மற்றும் பால்+தேன் கலந்து குடித்தால் ரத்தம் அதிகரிக்கும் ஆண்மை பெருகும்
No comments:
Post a Comment