Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 24, 2023

நவோதயா வித்யாலயா சமிதி (NVS) வேலைவாய்ப்பு அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நவோதயா வித்யாலயா சமிதி (NVS) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Deputy Commissioner (Finance) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

நவோதயா வித்யாலயா சமிதி காலிப்பணியிடங்கள்:

நவோதயா வித்யாலயா சமிதியில் (NVS) காலியாக உள்ள Deputy Commissioner

(Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Deputy Commissioner (Finance) அனுபவம்:

Deputy Commissioner (Finance) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்கள்,

பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 11 / 12 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Deputy Commissioner (Finance) வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 15.12.2023 அன்றைய நாளின் படி, 56 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் NVS பணியாளராக இருப்பின் 02 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்படும்.

Deputy Commissioner (Finance) ஊதியம்:

இந்த NVS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி, ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

NVS தேர்வு முறை:

Deputy Commissioner (Finance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Personal Interaction (Deputation முறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NVS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் applications.nvs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்

Job Notification Click Here

Application link click here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News