Join THAMIZHKADAL WhatsApp Groups
கடந்த 2023 பிப்ரவரி மாதம் TNTET PAPER 2 - CBT முறையில் நடந்தது. சுமார் இரண்டு வாரங்கள் நடந்த இந்த தேர்வில் பல்வேறு வினாக்கள் மற்றும் விடைத் தெரிவுகளில் தவறுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து வெளிவந்த தற்காலிக விடைக்குறிப்பில் தவறுகளைச் சுட்டிக்காட்டும் விதமாக சுமார் 15000+ பேர் ஆட்சேபனை தெரிவித்ததாக TRB இணையதளத்தில் இன்றும் உள்ளது. பொதுவாக ஆட்சேபனை தெரிவிப்பவர்களில் தமக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்பட்சத்தில் தேர்ச்சி என்ற நிலையில் இருப்பவர்கள் மட்டுமே. அதாவது 75+ எடுத்தவர்களாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு வந்த TET PAPER 2 இறுதி விடைக்குறிப்புகளிலும், முடிவுகளிலும் மேலும் பேரதிர்ச்சி தரும் விதமாக தேர்வர்கள் சுட்டிக்காட்டிய பெரும்பாலான தவறான விடைகளுக்கு சரி எனவும், சரியான விடைகளுக்கு தவறு எனவும் வந்தது. இது தொடர்பாக TRB, பள்ளிக்கல்வித்துறை, CM CELL, RTI என எந்த வகையில் அணுக முற்பட்டாலும் தகவல்கள் முறைப்படி தர TRB மறுத்தது. அப்போது இந்த செய்திகள் ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக பேசுபொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்வு எழுதியவர்களில் ஒருசிலர் வழக்கு தொடுத்து சென்னை மற்றும் மதுரை உயர்நீதி மன்றங்கள் வாயிலாக எடுத்துக் கூறியதன் விளைவாக ஒருசில நாட்களில் TET தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் பொதுவான TET RE-RESULTS வெளியிட்டது TRB. ஆனால் இன்னமும் கூட நியாயப்படி கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என மேலும் பலர் நீதிமன்றங்களை நாடியிருந்தனர்.
இந்தநிலையில், தற்போது தமிழக அரசு UG TRB நியமனத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளுக்கு உட்பட்டு TET மதிப்பெண்கள் வரும் என காத்துள்ள பணி நாடுநர்கள் தற்போது விண்ணப்பிக்க இயலாத சூழலில் தவித்து வருகின்றனர். இதனை எடுத்துக் கூறும் விதமாக TRB GRIEVANCES க்கு E-MAIL தற்போது அனுப்பியும் உள்ளோம்.
கடந்த பத்து வருடங்களாக கிடைக்காத UGTRB நியமனத் தேர்வு வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாகவும், இனி அடுத்த வாய்ப்பு எப்போது என்பது கேள்விக்குறியே என்பதாலும், இந்த நியமனத் தேர்வு வாய்ப்பை பயன்படுத்த (81 தற்போதைய எனது மதிப்பெண்) என்னைப்போல 75+ TET ல் பெற்று 82 மதிப்பெண்கள் வர வேண்டி வழக்கு தொடுத்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் TRB, கல்வித்துறை, உதவ முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர் திருச்சி ஆல்பர்ட் கூறுகிறார்.
No comments:
Post a Comment