Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 4, 2023

TRB முக்கிய அறிவிப்பு.! ஆன்லைன் மூலம் வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்.! முழு விவரம்.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள மாணாக்கர்களுக்கிடையே ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் மாண்புமிகு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகைத் திட்டத்திற்கான தகுதித் தேர்வு 2023 – 2024 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

TRIUMPHS தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக ( Full Time Ph.D Programme ) நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணாக்கர்களிடமிருந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://trb.tn.gov.in/ ) மேற்படி அறிவிக்கை 16.10.2023 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக 15.11.2023 பிற்பகல் 5.00 மணிவரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top