Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் .02 / 2023 , நாள் 16.10.2023 ன்படி 2023-2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்திற்கான ( CMRF ) தகுதித் தேர்வு எதிர்வரும் 10.12.2023 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 4004 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு ( Hall Ticket ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( https://www.trb.tn.gov.in/ ) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . எனவே , தேர்வர்கள் 24.11.2023 முதல் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் ( Password ) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
எனவே , தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .
CMRF 2023-24 EXAM HALL TICKET DOWNLOAD | TRB PRESS NEWS - Download here
No comments:
Post a Comment