Join THAMIZHKADAL WhatsApp Groups
I.K.குஜ்ரால் |
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம்:
இரண்டொழுக்க பண்புகள் :
பொன்மொழி :
முன்னிரவில் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல்நலமும் செல்வமும் அறிவும் பெருகும் – இங்கிலாந்து
பொது அறிவு :
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பாரிஜாத பூக்கள்: இந்த பூக்களில் ஆன்டி-ஆக்சிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகிய குணங்கள் உள்ளன. இவை மட்டுமின்றி, பூக்கள் பல்வேறு குணமாக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது.
டிசம்பர் 04
1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது. இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது.
ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்
இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012) இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.
நீதிக்கதை
ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய ஆறு இருந்துச்சு ,அந்த ஆத்துல நிறைய மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்துச்சு.ஒருநாள் ஒரு பெரிய கொக்கு அங்க வந்துச்சு
அந்த கொக்கு ஆத்துல இறங்கி மீன் பிடிக்க தயாரா இருந்துச்சு
அப்ப ஒரு பெரிய மீன் அதோட காலுக்கு பக்கத்துல வந்துச்சு ,ஆனா இத விட பெரிய மீன் தன்கிட்ட வரும் அத பிடிச்சி திங்கலாம்னு நினச்சுது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அந்த பெரிய மீன் அதோட காலுக்கு அடியில வந்துச்சு
ஆனா அத பிடிக்காம அடுத்த பெரிய மீனுக்காக காத்துகிட்டு இருந்துச்சு
தொடர்ந்து காத்துகிட்டு இருந்த கொக்கு சாயந்திரம் வரைக்கு பெரிய மீனுக்காக காத்துக்கிட்டே இருந்துச்சு
சூரியன் மறைஞ்சதும் எல்லா மீனும் ஆத்துக்கு அடி பகுதிக்கு போய்டுச்சு,கடைசியா பசியில இருந்த கொக்கு அங்க இருந்த ஒரு நத்தய சாப்பிட்டு திருப்தி பட்டுக்கிடுச்சு
நீதி :- நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கிடனும் இல்லைனா சுமாரான முடிவுகளை நல்ல வாய்ப்புன்னு சொல்லி திருப்தி பட்டுக்கிட வேண்டியதுதான்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment