Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 31, 2023

ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான்

ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?

இந்த முறை 2/1/24 அன்று CL வழங்க இயலாது.....

ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...

Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்

CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...

CL ( விடுப்பு+விடுமுறை ) 10 நாள்கள் வரை allowed.....

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும்

( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...

இந்த முறை 23 /12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....

2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1 விடுப்பு நாள் , என 11 நாள்கள் ஆகிறது....

(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் *11 நாள்கள்* ) எனவே இது *CL* விதிகளின் படி எடுக்க *இயலாது* ....

எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( *12 CL* கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க *இயலாது* ..

ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...

சரி....

2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு *விடுப்பு* தேவை... என்ன செய்யலாம்?

CL தான் வழங்க இயலாது....

EL எடுக்கலாம்

அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...

2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

( ஒரு நாள் மட்டுமே EL)

(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்)

22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

*12 நாள்கள் EL* ஆக மாறிவிடும்...

இந்த பதிவின் நோக்கம்...

1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

ஏப்ரல் கடைசி வேலை நாள்...

அதே போல்

ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று

எப்போதும் CL எடுக்க இயலாது

2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு  மாறுபடும் ....

அந்த ஆண்டில் 10 நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...


விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News