Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 31, 2023

புத்தாண்டு பலன்கள் 2024 - மீனம் ராசியினருக்கு எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) எப்போதும் இன்முகத்துடனும், இனிய பேச்சுடனும் இருக்கும் நீங்கள் எல்லோரிடமும் பழகி எல்லோரையும் உங்கள் பால் ஈர்த்துக் கொள்வீர்கள். ஆடம்பரமாகவும், மிடுக்காகவும் உடையணிவீர்கள். கவர்ச்சியாகவும், கம்பீரமாகவும் காணப்படுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், உதவிகளும் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் அந்த அளவுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவது கடினம்தான். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக இருப்பது அவசியம். பிடிவாதத்தை தளர்த்திக் கொள்வதன் மூலம் உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும்.

இந்த ஆண்டில் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து விட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வெளியூர் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்கள் செய்து அதன்மூலம் நன்மைகள் பெறுவீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராக சிந்திக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திரப்பேறு, வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். பணிகளில் அக்கறையுடனும், கவனமுடனும் செயல்படுவது அவசியம்.

வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போடியாளர்களால் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான கொள்முதல் செய்யும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கடன் தொகையை நிலுவையில் விடுவது சிரமத்தை ஏற்படுத்தும். கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக்கூடும். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். நேரத்திற்கு வேலைகளை முடித்துக்கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை ஏற்படுத்துவதைத் தவரிக்கவும்.

மாணவர்களுக்கு: படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதன்மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். உயர் கல்விக்காக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு: பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியடைய வைப்பீர்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடாமல் உங்களில் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

பெண்களுக்கு: குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு திடீர் திருமண வாய்ப்பும் கிடைக்கப் பெறும். புத்திரப்பேறும் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக சேமிப்புகள் தக்க நேரத்தில் உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

நட்சத்திர பலனகள்

பூரட்டாதி 4-ம் பாதம்: இந்த ஆண்டு, உத்தியோகஸ்தர்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத தனலாபத்தைப் பெறுவீர்கள்.

உத்திரட்டாதி: இந்த ஆண்டு, சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் கவனம் தேவை.

ரேவதி: இந்த ஆண்டு, நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம். நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பண வரவில் தடை இருக்காது.

பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும் 

விளக்கு பரிகாரம்: வீட்டில் தினமும் 3 ஐந்து முக மண் பித்தளை விளக்கு நல்லெண்ணை விட்டு ஏற்றவும் 

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன் 

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு 

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி | + பணவரவு மற்றும் வெளிநாடு செல்லுதல் | - உங்கள் மீது புறம் கூறுதல்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News