Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 31, 2023

க்யூட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்: ஜன.24ம் தேதி கடைசி நாள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
க்யூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 24ம் தேதி கடைசி நாள் என என்டிஏ தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்திவருகிறது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2024 மார்ச் 11 முதல் 28ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் https://pgcuet.samarth.ac.in/ என்ற இணையதளம் வழியாக ஜனவரி 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 25 கடைசி நாள். திருத்தம் மேற்கொள்ள ஜனவரி 27 முதல் 29ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும். பரிசீலனைக்கு பின்னர் தேர்வுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 7ம் தேதி வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பத்தில் சிரமங்கள் இருப்பின் 011 – 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News